‘வழக்கை ரத்து பண்ணிக்கலாம்’.. ‘ஆனா..!’.. ‘மோதலில் ஈடுபட்ட’ மாணவர்களுக்கு.. ‘நீதிமன்றம் கொடுத்த’ விசித்திர தண்டனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 11, 2020 05:06 PM

திருச்சி- திண்டுக்கல் சாலையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் கடந்த ஜூலை மாதம் ஜூனியர் சீனியர் மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் உருட்டுக்கட்டை, கல், சோடா பாட்டில் உள்ளிட்டவை மூலம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் 28 மாணவர்கள் மீதான விசாரணை திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

HC order college student to clean govt hospital ward

மாணவிகளைக் கிண்டல் செய்த மூன்றாமாண்டு மாணவர்களை, 4ஆம் ஆண்டு மாணவர்கள் தட்டி கேட்டதால் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், மாணவர்கள் ஒருவருக்கொருவர் மீதான் வழக்குகளை சமரச உடன்படிக்கையின் அடிப்படையில் வாபஸ் பெறத் தயாராகினர். இதை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றம் மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தது.

எனினும் இவ்வழக்கை ரத்து செய்த நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா, இந்த தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வரிட கடிதம் பெற்று, அதனை சமர்ப்பித்துவிட்டு, பின்னர் அங்கு உள்ள பொதுப்பிரிவு வார்டில் வரும் பிப்ரவரி 22-ம் தேதி வரை வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியைச் செய்ய வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கிலான அவரது இந்த உத்தரவு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Tags : #COLLEGESTUDENTS #HIGHCOURT