‘சார்ஜ் போட்டா 25 நாள் பல் தேய்க்கலாம்!’.. உலக சந்தையில் அறிமுகமாகும் ‘எலக்ட்ரிக் டூத் ப்ரஷ்’!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்உலக சந்தையைத் தொடர்ந்து ஷாவ்மி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள Mi Electric Tooth Brush T300 என்கிற எலக்ட்ரிக் டூத் பிரஷ் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

MI Crowdfunding திட்டத்தின் கீழ் 1,299 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த ப்ரஷ் நேரடியாகக் கடைகளில் விற்பனைக்கு வராது என்றும் 1000 யூனிட்களுக்கு நிதி கிடைத்துவிட்டால் மார்ச் 10-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உலக சந்தையில் விற்கப்படும் ப்ரஷ்களில் இருக்கும் ஸ்மார்ட் அம்சங்களான ஆப் வசதி, போனுடன் இணைத்துக்கொள்ளும் வசதி முதலானவை இந்த ப்ரஷில் இல்லாவிட்டாலும் விலையும் டிசைனும் அனைவரையும் கவர்கின்றன.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 25 நாட்களுக்கு பயன்படுத்தக்கூடிய இந்த ப்ரஷ் 3 நிற ரிங்குகளுடன் வருகிறது. ப்ரஷ் பகுதியை 4 மாதங்களுக்கு ஒருமுறை மீண்டும் ரீ-ஆர்டர் செய்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் தண்ணீரில் பாதிக்கப்படக் கூடாதென 'IPX-7 Water resistant' வசதியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ப்ரஷ் ஒரு வருட வாரண்ட்டியுடன் விற்பனை செய்யப்படவிருக்கிறது.
