'எங்க சண்ட ரொம்ப உக்ரமா இருக்கும்'...'மாணவிகளுக்குள் நடந்த சண்டை'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Nov 28, 2019 05:02 PM
பள்ளி மாணவிகளுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவர்கள் தங்கள் நண்பர்களுக்குள் பள்ளி நாட்களில் சண்டையிட்டு கொள்வது வழக்கம். அப்படி சண்டையிட்டு கொண்டாலும், அந்த சண்டை சில நாட்களுக்கு கூட நீடிப்பது இல்லை. பல வருடங்கள் கழித்து அதனை மலரும் நினைவுகளாக நினைத்து பார்ப்பதும் உண்டு. ஆனால் அந்த சண்டையானது வரம்பு மீறி செல்லும் போது தான் பிரச்னை என்பது உருவாகிறது.
அந்த வகையில் டெல்லியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவிகள் சண்டையிட்டு கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றிலும் மாணவர்கள் நிற்க, மாணவிகள் தங்களுக்குள் கொடூரமாக தாக்கி கொண்டார்கள். அங்கிருந்த மாணவர்கள் யாரும் அவர்களை தடுக்க முயற்சிக்கவில்லை. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Don’t know what the fight was about..
But, #Delhi..🤷🏻♂️ pic.twitter.com/6Wljs1S8pa
— Pramod Madhav (@madhavpramod1) November 28, 2019
