‘ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்கள்’! ‘அத்துமீறிய பெயிண்டர்’.. மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்த மக்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 28, 2019 10:39 AM

ஆடு மேய்க்கும் பெண்களிடம் அத்துமீற முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Man arrested for misbehaving with women in Tirupur

திருப்பூர் மாவட்டம் பல்லடம் புள்ளியம்பாளயத்தில் உள்ள தோட்டப் பகுதியில் பெண்கள் சிலர் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த நபர் அப்பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண்கள் கூச்சலிட்டுள்ளனர்.

உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்துள்ளனர். மேலும் சிலர் அந்த நபரை செருப்பால் அடிக்க தொடங்கியுள்ளனர். இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற நபரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், அவர் மதுரை இலங்கை முகாமை சேர்ந்த தினேஷ் பிரவீன்குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் பெயிண்ட்டிங் வேலைக்காக பல்லடத்துக்கு வந்தது தெரியவந்துள்ளது.

Tags : #SEXUALABUSE #POLICE #ARRESTED #TIRUPUR #MISBEHAVING