இன்னொரு 'டைம்' இப்படி பண்ணீங்கன்னா...அப்புறம் வெளையாட முடியாது!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Sep 24, 2019 04:55 PM
களத்தில் ஆக்ரோஷமாக விளையாடும் கேப்டன்களில் முதன்மையான இடம் விராட் கோலிக்கு உண்டு.அதேபோல இவரது அதிரடி நடவடிக்கைகளால் அவ்வப்போது ஐசிசி இவருக்கு வார்னிங்கும் அளித்து வருகிறது.
அந்தவகையில் 3-வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹென்றிக்ஸ் தோள்பட்டையில் கோலி பலமாக இடித்தார்.இதனால் அவருக்கு ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.அத்துடன் தகுதி இழப்பிற்கான புள்ளி ஒன்றையும் அவருக்கு வழங்கியுள்ளது.
செப்டம்பர் 2016-ம் தேதி திருத்தப்பட்ட விதிமுறைகளின் கீழ் விராட் கோலி முறையற்ற விதத்தில் 3 முறை நடந்து கொண்டுள்ளார்.ஜனவரி 15,2018-ல் தென் ஆப்பிரிக்காவில் ஒருமுறை,உலகக்கோப்பை 2019-ல் ஆப்கான் அணிக்கு எதிராக ஒருமுறை,தற்போது மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பெங்களூரில் என்று மூன்று முறை ஒழுங்கு நடத்தையை மீறியதால் 3 தகுதியிழப்பு புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
அடுத்த 14 மாதங்களுக்குள் மீண்டும் ஒரு தகுதியிழப்பு புள்ளியை விராட் பெற்றால், அடுத்து ஒருசில போட்டிகளில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.