WATCH VIDEO: 'யாரு இடத்துல வந்து யாருகிட்ட'... படமெடுத்த பாம்பு 'பட்டென' அறைந்த பூனை!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Sep 17, 2019 11:47 AM
'பாம்பென்றால் படையும் நடுங்கும்' என்னும் பழமொழிக்கு பதில்,பூனை என்றால் பாம்பும் நடுங்கும் என புதுமொழி எழுதலாம் போல.அந்தளவுக்கு 4 பூனைகள் சேர்ந்து ஒரு பாம்பைக் கதற விட்டுள்ளன.

அண்மையில் நடிகர் நீல் நிதின் முகேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.அதில் ஒரு குட்டி பாம்பை நான்கு பூனைகள் சேர்ந்து சுற்றி வளைத்து அதனைத் தப்பிக்க முடியாமல் தடுக்கின்றன.இதனால் கடுப்பான பாம்பு படமெடுக்க பூனை ஒன்று ஓங்கி பாம்பை அறைகிறது.பூனையின் அறையால் பயந்துபோன பாம்பு இங்கும் அங்கும் ஓடி ஒருவழியாக தப்பித்து ஓடி மறைகிறது.
இதைப்பார்த்த ஒருவர் யாராவது பாம்பு பிடிக்கிறவர்களிடம் சொல்லி அந்த பாம்பை பிடித்து காட்டுக்குள் விட்டார்களா? என்று கேட்க அதற்கு நீல் நிதின்,''ஆமாம்,''என பதிலளித்துள்ளார். இந்த வீடியோவை இதுவரை சுமார் 96,000 பேர் பார்த்து ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
