'செல்பி' மோகத்தால்... இளைஞருக்கு 'நேர்ந்த' விபரீதம்... 2-வது நாளாக உடலைத்தேடும் போலீசார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Dec 11, 2019 03:46 PM

செல்பி மோகத்தால் உயிரிழந்த வாலிபரை தேடும் பணி 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.

Youth Drowned river, police have been searching the body

கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகில் உள்ள கோவனூர் பாலமலை ரோடு பகுதியை சேர்ந்த இளங்கோ(30) என்னும் வாலிபர் தன்னுடைய நண்பருடன், நேற்று வன பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்தார். சாமி கும்பிட்டு விட்டு அருகில் இருந்த நெல்லித்துறை பவானி ஆற்றின் மீது ஏறி நின்று செல்பி எடுத்து இருக்கிறார்.

அப்போது எதிர்பாராதவிதமாக இளங்கோ ஆற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகம் இருந்ததால் நண்பரின் கண்முன்னே இளங்கோ நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இளங்கோவின் உடலை பரிசல்காரர்கள் உதவியுடன் தேட ஆரம்பித்தனர்.

ஆனால் இளங்கோவின் உடல் கிடைக்கவில்லை. தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் போலீசார் இளங்கோ உடலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #POLICE #RIVER