காதலியா? நிச்சயம் செய்த பெண்ணா?..குழப்பத்தில்.. இளைஞர் எடுத்த 'விபரீத' முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Dec 10, 2019 11:38 PM

பழைய காதலி, வீட்டில் பார்த்து நிச்சயித்த பெண் இருவரில் யாரை திருமணம் செய்வது? என்ற குழப்பத்தில் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Youth commits suicide in Namakkal, police investigate

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கார் டிரைவரான இவரும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மணிகண்டன் வீட்டில் வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். அந்த பெண்ணுடன் மணிகண்டன் வெளியில் சென்று வந்துள்ளார்.

இந்தநிலையில் மணிகண்டனின் பழைய காதலி அவரை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் மாறிய மணிகண்டன் காதலியை திருமணம் செய்ய முடிவெடுத்து உள்ளார். இது மணிகண்டன் வீட்டில் பிரச்சினைக்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் சிக்கித்தவித்த மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்போது இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #POLICE