மொத்தம் 11... ஆனால் 'இறந்தவர்களின்' உடலில்... எந்தவொரு 'புல்லட்டும்' இல்லை.. பிரேத பரிசோதனை அறிக்கை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Dec 13, 2019 01:23 AM

கடந்த வாரம் தெலுங்கானா என்கவுண்டரில் இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகி இருக்கிறது.

Hyderabad encounter: No bullets found in bodies of accused

பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி இறந்த வழக்கில் முகம்மது ஆரிஃப், சென்ன கேசவலு, நவீன், சிவா ஆகிய நால்வரை ஹைதராபாத் காவல்துறை கைது செய்தது. தொடர்ந்து நால்வரையும் விசாரணைக்கு அழைத்துச்சென்ற போது அவர்கள் நால்வரும் தப்பி ஓட முயற்சி செய்ததாகவும், அதனால் அவர்கள் நால்வரையும் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றதாக காவல்துறையினர் விளக்கம் அளித்தனர்.

இந்தநிலையில் இறந்த நால்வரின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் முஹம்மது உடலில் நான்கு புல்லட்டுகள் இருந்ததற்கான தடயமும், சிவா, சென்ன கேசவலு உடல்களில் 3 குண்டுகள் இருந்ததற்கான தடயமும் நவீன் உடலில் 1 குண்டு பாய்ந்ததற்கான அடையாளம் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் நால்வரின் உடலிலும் ஒரு குண்டு கூட தங்கவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது உச்சநீதிமன்றம் சார்பாக  இந்த என்கவுண்டர் வழக்கை விசாரித்திட 3 பேர் அடங்கிய விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு இருக்கிறது. மறுபுறம் தேசிய மனித உரிமைகள் ஆணையமும் இந்த என்கவுண்டர் வழக்கை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.