டேய் தம்பி 'ஆபாச' படம் பாத்தியா?.. நெல்லை இளைஞருக்கு 'மிரட்டல்'.. வைரலான 'ஆடியோ'.. யார் காரணம் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Dec 11, 2019 01:13 PM
சிறுவர்கள் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதனையடுத்து ஆபாச வீடியோக்கள் பார்த்த 6500 பேர் குறித்த பட்டியல் ரெடியாக இருப்பதாகவும், விரைவில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையில் சில நாட்களுக்கு முன் நெல்லையை சேர்ந்த இளைஞரை, போலீஸ் என்று ஒருவர் மிரட்டும் வாட்ஸ்அப் ஆடியோ வெளியாகி வைரலானது.

அதில் “ஏய் தம்பி ஆபாச படம் பார்த்தியா... அது தப்புன்னு தெரியாதா... நாளைக்கு சம்மன் வரும். கோர்ட்டில் போய் அபராதம் கட்டு” என்று போலீஸ் தோரணையிலேயே மிரட்டல் நபர் பேசுகிறார்.
பின்னணியில் போலீஸ் மைக் சத்தமும் கேட்கிறது. இதனால் எதிர் முனையில் பேசும் நபர் பயந்து நடுங்கிக் கொண்டே பேசுகிறார். முதலில் ஆபாச படத்தை பார்க்கவில்லை என்று கூறும் வாலிபர் பின்னர் பயந்து ஆபாச வீடியோ இணைய தளத்தில் சென்று 15 நிமிடங்கள் வரையில் பார்த்ததாக ஒப்புக் கொள்கிறார். இதற்கு மேல் பார்க்க மாட்டேன் என்று கெஞ்சுகிறார். 7 நிமிடங்கள் வரையில் ஓடும் இந்த ஆடியோ வாட்ஸ்-அப்பில் வேகமாக பரவி வருகிறது.
ஆனால் போலீஸ் யாருக்கும் இதுதொடர்பாக கால் செய்து பேச மாட்டார்கள் என்று சமீபத்தில் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் நெல்லை இளைஞரை மிரட்டியவர் யார்? என்று நெல்லை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் கார்த்திகேயன் என்பதும், அவர் சென்னையை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து நெல்லை போலீசார் கார்த்திகேயன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய சென்னை வந்துள்ளனர். இன்று அல்லது நாளைக்குள் போலீசார் கார்த்திகேயனை கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
