‘தியேட்டருக்குப் போன 5 மாத கர்ப்பிணி’.. ‘காரில் கடத்திய 4 பேர் கொண்ட கும்பல்’! அடுத்து நடந்த கொடுமை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 13, 2019 03:57 PM

5 மாத கர்ப்பிணி பெண்ணை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

4 youths arrested for abusing pregnant woman in Cuddalore

கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 5 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை படம் பார்க்க திரையரங்கம் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பிரசாந்த், ராஜமுத்து, முனுசாமி, பிரபாகரன் ஆகிய 4 பேர் அப்பெண்ணை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண் அவர்களை செருப்பைக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் பெண்ணை காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் மீது ஆள்கடத்தல், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #SEXUALABUSE #POLICE #CUDDALORE #PREGNANT