'ஹிந்தி' பாடலில் அமெரிக்க 'அதிபரின்'... 'அட்டகாச' என்ட்ரி பிளஸ் 'டான்ஸ்'... அமெரிக்காவிலும் 'ஹிட்' அடித்த பாலிவுட் 'மஸ்தானி'...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரபல ஹிந்தி பாடலான 'மல்ஹாரி' என்ற பாடலுக்கு ஆடுவது போன்று சித்தரிக்கப்பட்ட அட்டகாசமான பாடல் காட்சியை டிரம்பின் உதவியாளர் டான் ஸ்கேவினோ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த திங்கள் கிழமை இந்தியா வந்த அவருடன் அவரது மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப் மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் வந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகை சமூக ஊடக இயக்குநரும், அதிபர் ட்ரம்பின் உதவியாளருமான டேன் ஸ்கேவினோ தனது ட்விட்டர் பக்கத்தில் அதிபர் ட்ரம்பின் மார்பிங் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் பிரபல ஹிந்தி பாடலான மல்ஹாரி என்ற பாடலுக்கு அதிபர் ட்ரம்ப் ஆடுவது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த பாடல் 2015ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் படமான பாஜிராவ் மஸ்தானி என்ற திரைப்படத்தில், நடிகர் ரன்வீர் சிங் ஆடிய நடனமாகும்.
அந்த வீடியோவில் அதிபர் ட்ரம்பின் முகத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலானதையடுத்து டேன் ஸ்கேவினோ தற்போது அதனை பகிர்ந்துள்ளார். இந்த பாடல் தற்போது அமெரிக்காவிலும் பிரபலமடைந்துள்ளது.
✈️to India!🇺🇸🇮🇳#NamasteTrump pic.twitter.com/N90UOaSqVa
— Dan Scavino (@DanScavino) February 23, 2020
