திருமண 'வரவேற்பில்' நடந்த இசைக்கச்சேரியால்... மணமேடையிலேயே 'சரிந்து' விழுந்து... இறந்த 'புதுமாப்பிள்ளை'... உறவினர்கள் அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமண வரவேற்பில் நடைபெற்ற இசைக்கச்சேரியால் மாப்பிள்ளை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்த போத்தன் நகரில் கணேஷ்(25) என்னும் வாலிபருக்கு சமீபத்தில் திருமண வரவேற்பு நடைபெற்றது. இசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்த போது அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் திருமண வரவேற்பு முடிந்து, திருமணம் முடிந்த பின்னர் நேற்று (வெள்ளிக்கிழமை) கணேஷ் மயக்கமடைந்து சுருண்டு விழுந்தார்.
இதையடுத்து அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கணேஷின் பெற்றோர் அளவுக்கு அதிகமான இரைச்சல் மிகுந்த கச்சேரியால் தான் கணேஷிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக தெரிவித்து இருக்கின்றனர்.
இசைக்கச்சேரியால் மாப்பிள்ளை இறந்த சம்பவம் மணமகள் மற்றும் உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
