'2400 பேரை' வீட்டுக்கு அனுப்பிட்டு.. '7 ஆயிரம்' ரூபாய்ல டின்னர் கொண்டாட்டமா?.. சேர்மனை 'விளாசும்' நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Manjula | Nov 25, 2019 06:47 PM

2400 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய மறுநாள் 7 ஆயிரம் ரூபாய்க்கு பாஸ்தா சாப்பிட்டு, அந்த புகைப்படங்களை வீ வொர்க் சேர்மன் பகிர்ந்தது சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது. நவம்பர் 21-ம் தேதி வீ வொர்க் நிறுவனம் அதன் மொத்த ஊழியர்களில் சுமார் 20% பேரை அதாவது 2400 பேரை வீட்டுக்கு அனுப்பியது.

firing 2,400 people, WeWork boss shares photo of $100 pasta

கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக செலவினங்களை குறைக்க இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்ததாக அந்நிறுவனம் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தது. பணியை இழந்த ஊழியர்கள் அலுவலகத்துக்கு வெளியே நின்று கதறி அழுத புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இந்தநிலையில் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய மறுநாள் அதன் சேர்மன் மார்செலோ கிளாரின் நியூயார்க் நகரத்தில் உள்ள பிரபல ரெஸ்டாரெண்டில் பாஸ்தா வகைகளை ருசித்து சாப்பிட்டு, அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாக, மார்செலோவின் இந்த செயலை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Tags : #INSTAGRAM