'கையில் இருந்த கத்தி'...'நடுரோட்டில் காவலருக்கு நேர்ந்த கொடூரம்'...பகீர் கிளப்பும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Dec 20, 2019 05:37 PM

ஒரத்தநாடு அருகே நடுரோட்டில் போதை ஆசாமிகள் போலீஸ் ஏட்டை தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 Drunk man attacks police in Thanjavur video goes viral

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் திருவோணம் போலீஸ் சரக பகுதியில் வெளிச்சந்தையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் ஏட்டு செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் நேற்று திருவோணத்தை அடுத்துள்ள புதுவிடுதி ஆற்றுபாலம் அருகே பட்டுக்கோட்டை-செங்கிப்பட்டி பிரதான சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த கள்ள சாராய விற்பனையாளர்களான இளங்கோவனும், அருண் பாண்டியனும் காவலர்களிடம் கத்தி மற்றும் கட்டையை காட்டி மிரட்டியுள்ளார்கள். அவர்களை போலீஸ் ஏட்டு செந்தில்குமார் பிடிக்க முயல, அவரை கொடூரமாக தாக்கி விட்டு இருவரும் தப்பி ஓடியுள்ளார்கள். பட்டப்பகலில் பிரதான சாலையில் போலீஸ் ஏட்டை வாலிபர்கள் சரமாரியமாக தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போதை ஆசாமிகள் இருவரும் காவலரை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Tags : #POLICE #TAMILNADUPOLICE #ATTACKED #THANJAVUR #DRUNK MAN