'புகார் அளித்த மனைவிக்கு'... 'வாட்ஸ் அப் மூலம்... 'குவைத்திலிருந்து கணவர் அளித்த அதிர்ச்சி'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Aug 08, 2019 02:45 PM
குவைத்தில் வேலை செய்யும் கணவர், உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் மனைவிக்கு வாட்ஸ் ஆப் மூலம் விவகாரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் முஸாபர்பூரில், பிஹாரி கிராமத்தைச் சேர்ந்தவர் முஸ்லிம் பெண் ஒருவர். இவரின் கணவர் குவைத்தில் ஒரு கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் மணமகன் வீட்டார், 5 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை குறித்து, காவல்நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்தார்.
இதையடுத்து அந்தப் பெண்ணை வழக்கை வாபஸ் வாங்குமாறு, கணவர் மற்றும் அவரது குடும்பம் நிர்பந்தம் செய்து வந்தது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அந்தப் பெண் உள்ளூர் காவல்நிலையத்திற்கு வந்து, தனது கணவர் தன்னை குவைத்தில் இருந்தபடி வாட்ஸ் அப் மூலம் மூன்று முறை தலாக் கூறி விவகாரத்து செய்ததாக புகார் அளித்துள்ளார். இது சட்டவிரோதம் என அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது உத்தரப்பிரதேச போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.