‘கம்ப்ளைண்டா குடுக்குற..?’ கணவரின் உறவினர்களால்.. ‘இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 08, 2019 12:43 PM

உத்தரப்பிரதேசத்தில் கணவர் மீது புகார் அளித்த மனைவியின் மூக்கை உறவினர்கள் அறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.

UP Womans Nose Allegedly Cut Off By InLaws Over Triple Talaq

முத்தலாக் தடை மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குப் பிறகு அரசாணையிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் பெண் ஒருவருக்கு ஃபோன் மூலம் முத்தலாக் கூறிய கணவர் அவரை விவாகரத்து செய்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண் போலீஸாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் இருவீட்டாரையும் அழைத்து கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்போதும் கணவர் வீட்டார் ஒரு முடிவுக்கு வராமல் பிரச்சனை செய்துள்ளனர். இதனால் போலீஸார் முத்தலாக் சட்டத்தின்படி கணவர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகு கணவர் வீட்டுக்குச் சென்ற அந்தப் பெண்ணை அடித்து உதைத்த கணவரின் உறவினர்கள் அந்தப் பெண்ணின் மூக்கை அறுத்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் தாயையும் அவர்கள் கல்லால் அடித்துள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுபற்றி தகவலறிந்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #UTTARPRADESH #TRIPLETALAQ #WOMAN #NOSE #SHOCKING #BRUTAL #ATTACK #WIFE #HUSBAND #INLAWS