‘ஊசி போடணும்’ ‘கீழ இருக்குற ரூமுக்கு வாங்க’.. சிகிச்சைக்கு சென்ற இளம் பெண்ணுக்கு ஹாஸ்பிட்டலில் நடந்த கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Aug 26, 2019 11:42 AM

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Minor girl gang raped by hospital staff in Uttar Pradesh

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் 17 வயது இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்துள்ளார். கடந்த 23 -ம் தேதி இரவு இப்பெண் இருந்த வார்ட்டுக்கு வந்த வார்ட் பாய் சிவானந்தன் என்பவர் ‘உங்களுக்கு ஊசி போட வேண்டும், அதனால் கீழே உள்ள ரூம்முக்கு வாருங்கள்’ என அழைத்துள்ளார். உடனே அப்பெண் தனது அம்மாவை உடன் அழைத்து வருகிறேன் என கூறியுள்ளார்.

அதற்கு சிவானந்தன் ‘அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்’ என கூறி அப்பெண்ணை கீழே அழைத்து சென்றுள்ளார். பின்னர் அப்பெண்ணுக்கு மாத்திரை ஒன்றை சாப்பிட கொடுத்துள்ளார். இதனால் அப்பெண் அங்கே மயக்கம் அடைந்துள்ளார். இதனை அடுத்து சிவானந்தன், மருத்துவமனை ஊழியர் விஷால் என்பவருடன் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மயக்கம் தெளிந்தப்பின் தனக்கு நடந்த கொடுமை குறித்து தனது தாயிடம் அப்பெண் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு சிவானந்தன் மற்றும் விஷால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சைக்கு சென்ற இளம்பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SEXUALABUSE #HOSPITAL #GIRL #UTTARPRADESH #STAFF #GANGRAPE