‘இதுக்காகவா இப்டி சண்ட போட்டீங்க’.. ‘மிரள வைத்த காரணம்’.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Aug 21, 2019 12:44 PM
உத்தரப்பிரதேசத்தில் இரண்டு காவலர்கள் சண்டை போட்டுக்கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிதூர் பகுதியை சேர்ந்த காவலர்களான ராஜேஷ் சிங் மற்றும் சுனில் குமார் ஆகிய இருவரும் போலீஸ் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென சாலையின் ஓரமாக இருவரும் சண்டையிடத் தொடங்கியுள்ளனர். இது உடனிருந்த சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து இருவரையும் சமாதானம் செய்துவிட்டு விசாரித்ததில் போலீஸ் வாகனத்தின் முன் சீட்டில் அமர்வது தொடர்பாக இருவரும் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் வெளியான இந்த வீடியோ வைரலானதை அடுத்து இரு காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags : #POLICE #UTTARPRADESH #PATROL #VEHICLE #CONSTABLES #BEAT #FRONTSEAT
