‘நிலைத்தடுமாறி விழுந்ததில்’... ‘ஹெல்மெட் அணியாமல் சென்ற’... 'இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Aug 14, 2019 03:44 PM
கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது, பின்னால் வந்த லாரி ஏறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அழகியமண்டம் அருகே பரைக்கோடு பகுதியை சேர்ந்தவர் 22 வயதான ஜினிஸ். இவர் வெளிநாட்டில் உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். தற்போது விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்த ஜினிஸ், இன்று காலை தக்கலைக்கு சென்றுள்ளார். பின்னர் விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பரைக்கோடு பகுதியில் லாரியை முந்தி செல்ல ஜினிஸ் முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
இதில் நிலைத்தடுமாறி அவர் கீழே விழுந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த லாரி, அவர் மீது ஏறியது. அந்த தருணத்தில் ஜினிஸ் தலைக்கவசம் அணியவில்லை எனத் தெரிகிறது. இதில் தலையில் படுகாயம் அடைந்த ஜினிஷை அங்கிருந்தவர்கள் மீட்டு, தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.