ராணுவ சீருடையில் 4 மாதங்கள் வேலை பார்த்த பிறகு.. இளைஞருக்கு தெரிய வந்த அதிர்ச்சி!!.. பணத்தையும் இழந்த பரிதாபம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாசீருடையுடன் ராணுவ வீரராக நான்கு மாதங்கள் பணியாற்றி சம்பளமும் கிடைத்த பிறகு இளைஞருக்கு தெரிய வந்த விஷயம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று பல இடங்களில் இளைஞர்கள் தொடர்ந்து தங்கள் திறமைக்கேற்ற வகையில் வேலை கிடைக்கும் இடத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.
ஒருசில முயற்சிகளில் உடனடியாக சிலருக்கு வேலை கிடைத்தாலும் மறுபக்கம் தங்களின் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து வேலைக்கு விண்ணப்பித்தே இருந்து அப்படி கிடைக்கும் ஒரு வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளவும் முயற்சி செய்வார்கள்.
இப்படி ஒரு பக்கம், வேலை கிடைப்பதற்காக பலரும் ஏராளமான முயற்சிகளை செய்து கொண்டிருக்கும் அதே வேளையில், வேலையை வாங்கி தருவதன் பெயரில் ஏராளமான மோசடி வேலைகளும் அரங்கேறி தான் வருகிறது. அப்படி ஒரு செய்தி தான் தற்போது வெளியாகி பலரையும் பதற்றம் அடைய வைத்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோஜ் குமார். இவர் வேலை தேடி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், ராகுல் சிங் என்ற நபர் இவருக்கு அறிமுகமாகி உள்ளதாக தெரிகிறது. தான் ராணுவத்தில் உயர் அதிகாரியாக இருப்பதாகவும், பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாகவும் மனோஜ் குமாரிடம் கூறியுள்ளார் ராகுல் சிங். இதனை நம்பி சுமார் 16 லட்ச ரூபாய் வரை மனோஜ் குமார் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மனோஜ் குமாருக்கு பணி கிடைத்து விட்டதாக கூறி அடையாள அட்டை மற்றும் ராணுவ சீருடை உள்ளிட்ட விஷயத்தையும் ராகுல் கொடுத்துள்ளார். மேலும் பணம் கொடுத்து தனக்கு ராணுவத்தில் வேலை கிடைத்து விட்டதை நம்பி சீருடை அணிந்து கொண்டு ராணுவ வீரர் போல ராகுல் சொல்லும் வேலைகளை மனோஜ் குமார் செய்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. நான்கு மாதங்கள் வேலை பார்த்து இதற்கான சம்பளத்தையும் மனோஜ் குமார் பெற்றுள்ளதாக தெரிகிறது.
அப்படி ஒரு சூழலில், ராணுவ பணி குறித்து மனோஜ் குமாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக சில ராணுவ வீரர்களுடன் பேசும் போது தான் அவரது அடையாள அட்டை போலி என்பது உறுதியாகி உள்ளது. இதனால் உண்மையை தெரிந்து கொண்ட மனோஜ் குமார், ராகுல் சிங் செய்த மோசடி கொடுத்தும் அவரிடம் பேசி உள்ளார். ஆனால் பதிலுக்கு மனோஜ் குமாருக்கு ராகுல் மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் இது தொடர்பாக தற்போது மனோஜ் குமார் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரித்த போலீசார், ராகுல் சிங்கிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிகிறது. மேலும் இதன் பின்னால் வேறு யாருக்காவது சம்பந்தம் உண்டா என்றும், மனோஜை போல யாரையாவது ஏமாற்றி உள்ளார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Also Read | பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடையா??.. இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு??.. வெளியான பரபரப்பு தகவல்!!

மற்ற செய்திகள்
