திருமண நிகழ்ச்சியில் திடீர்ன்னு என்ட்ரி கொடுத்த 'சவப்பெட்டி'.. பதறிப் போன விருந்தினர்கள்!!.. பின்னணி என்ன??
முகப்பு > செய்திகள் > உலகம்திருமணம் என்பது இரண்டு பேர் தங்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு முக்கியமான தருணத்தின் தொடக்கம் ஆகும்.
Also Read | "அடேங்கப்பா".. வெப் சீரிஸாக உருவாகும் 2007 டி 20 World Cup??.. வெளியான தகவலால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
இன்றைய காலகட்டத்தில் திருமணத்தை சுற்றி நடக்கும் எல்லா விஷயமும் பெரிய அளவில் இணையத்தில் வைரலாக பேசப்படுகிறது.
உதாரணத்திற்கு திருமணத்திற்காக தயாராகும் பத்திரிக்கைகள், இன்றைய காலக்கட்டத்தில் புதுமையாகவும் பலரது கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையிலும் இருக்கிறது. இதே போல தான் திருமணத்திற்கான போட்டோஷூட்டும் கூட இப்படி எல்லாம் யோசித்து பார்க்க முடியுமா என்ற அளவுக்கு புத்தம் புது கண்டெண்ட்கள் கொண்டு அசத்தலாகவும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கின்றனர்.]
மேலும், திருமணம் நடைபெறும் சமயத்தில் வித்தியாசமாக நடைபெறும் விஷயங்கள் கூட அதிக கவனம் பெறும். இப்படி திருமணத்தை சார்ந்து நடக்கும் பல விஷயங்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில், திருமணத்தின் போது நடந்த சம்பவம் தொடர்பான செய்தி, தற்போது உலக அளவில் வைரலாகி நெட்டிசன்கள் கருத்தையும் பெற்று வருகிறது.
இது தொடர்பாக வெளியான வீடியோவின் படி, திருமணம் நடைபெறும் இடத்தில் உறவினர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் கூடி இருக்கின்றனர். அப்போது அந்த இடத்திற்கு ஒரு பெரிய கார் வந்து நிற்கிறது. அந்த சமயத்தில், அதற்குள் இருந்து ஒரு சவப்பெட்டி ஒன்றை சில பெண்கள் மற்றும் ஆண்கள் இணைந்து தூக்கிக் கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து, அந்த சவபெட்டியை திருமணம் நடைபெறும் இடத்திற்கு அருகேயும் கொண்டு வைக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, அந்த சவப்பெட்டிக்குள் இருந்து மணமகன் கோலத்தில் ஒரு நபர் வருவதும் தெரிகிறது. ஆனால், மணமகள் அங்கே இல்லை என தெரிகிறது. இது தொடர்பான வீடியோ டிக்டாக்கில் முதலில் பகிரப்பட்டதாகவும், பின்னர் சோஷியல் மீடியாவில் அதிகம் வைரல் ஆனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த சம்பவம் எங்கே நடந்தது என்பது குறித்து உறுதியான விவரங்கள் தெரியவில்லை என கூறப்படுகிறது. ஆனால், திருமணம் போன்ற ஒரு நிகழ்வின் போது இப்படி சவப்பெட்டியில் மாப்பிள்ளை வந்து இறங்கியது தொடர்பான வீடியோ, பெரிய அளவில் கருத்துக்களையும் பெற்று வருகிறது.