கடலுக்கு நடுவே தத்தளித்த நபர்.. பத்திரமாக மீட்டதும் சொன்ன விஷயம்.. அதிர்ந்து போன மீனவர்கள்!!
முகப்பு > செய்திகள் > உலகம்கடலுக்கு நடுவே நபர் ஒருவர் தத்தளித்து கொண்டிருந்த நிலையில், அவரை படகு ஒன்று காப்பாற்ற சென்றதும், அதன் பின்னர் தெரிய வந்த தகவலும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹவாய் பகுதியில் உள்ள கடலின் நடுவே நபர் ஒருவர் கடல் நீரில் தத்தளித்து கொண்டிருந்ததை மீன் பிடிக்க சென்ற படகில் இருந்தவர்கள் கவனித்துள்ளனர்.
கடலின் கரையில் இருந்து சுமார் 3 மைல் தொலைவில் நபர் ஒருவர் தத்தளிப்பதை கண்டு அவர்கள் அருகே சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி இருக்கையில், அவர் அருகே சென்று படகில் இருந்தவர்கள் பத்திரமாக அவரை மீட்டு படகும் ஏற்றி உள்ளனர். அவர் கடல் நீரில் இருந்ததால் அதிகம் நடுங்கி கொண்டே இருந்துள்ளார். அது மட்டுமில்லாமல், நீரிழப்பும் அவருக்கு உருவானதால் தண்ணீர் கொடுத்ததுடன் முதலுதவியையும் அவர்கள் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, அந்த நபர் எப்படி அங்கே சிக்கிக் கொண்டார் என்பது குறித்த தகவல், படகில் இருந்த அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்த நபர் மேசன் என்பதும், அவரது வயது 28 என்பதும் தெரிய வந்துள்ளது. முன்னதாக கடலில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக அங்கே சிக்கிக் கொண்ட மேசன், 24 மணி நேரமாக கடல் நீரில் சிக்கித் தவித்து கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதே போல, அவரை காப்பாற்றிய மீன் பிடி படகு கூட அந்த துறைமுகத்தில் இருந்து வெளியேறிய கடைசி படகு என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஒரு வேளை, அந்த படகு கவனிக்காமல் இருந்திருந்தால் கூட மேசன் உயிருக்கு ஆபத்து விளைந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
24 மணி நேரம் கடல் நீரில் தத்தளித்த போது கூட, அவரது உயிருக்கு எந்தவித ஆபத்தும் நேராமல் அவர் தப்பித்துள்ள விஷயம், பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அதே போல, மேசனை படகில் உள்ளவர்கள் காப்பாற்றுவது தொடர்பான வீடியோக்கள் கூட தற்போது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
Mason was in an ocean accident in Hawaii that left him fighting for his life for over 24 hours at sea.
He was rescued by a fishing boat 3 miles off shore.
(🎥:ryanncarroll) pic.twitter.com/YDVzTCil1I
— GoodNewsMovement (@GoodNewsMVT) November 29, 2022