இந்திய ராணுவத்துக்கு பறந்த திருமண பத்திரிக்கை.. "அதுல இருந்த விஷயம் தான் இப்ப செம ட்ரெண்டிங்"!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்றைய காலகட்டத்தில், நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்கள் ஒரு பக்கம் அதிர்ச்சி நிறைந்ததாக இருக்கும். ஆனால் அதே வேளையில், அதற்கு நிகராக மனதை நெகிழ வைக்கக் கூடிய வகையிலும் கூட ஏராளமான விஷயங்கள் அரங்கேறும்.

அப்படி பல விஷயங்களை நாம் கடந்து செல்லும் போது, மனதை நெகிழ மட்டும் வைக்காமல் ஒருவித தாக்கத்தை கூட ஏற்படுத்தும்.
அந்த வகையில் ஒரு செய்தி தான், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.
கேரளாவை சேர்ந்தவர் ராகுல். இவருக்கும் கார்த்திகா என்ற பெண்ணுக்கும் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி திருமணம் நடைபெற்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தங்களின் திருமணத்திற்கு முன்பாக ராகுல் மற்றும் கார்த்திகா ஆகிய இருவரும் தங்களின் திருமணத்திற்காக இந்திய ராணுவத்திற்கு பத்திரிக்கையுடன் ஒரு குறிப்பை சேர்த்து அனுப்பி உள்ளனர்.
அந்த குறிப்பில், "நாங்கள் இருவரும் நவம்பர் 10 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். உங்களின் தியாகத்திற்கும் நாட்டுப்பற்றுக்கும் நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். நீங்கள் என்றும் எங்களை பாதுகாப்புடன் வைத்திருப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். உங்களால் தான் நாங்கள் நிம்மதியாக தூங்குகிறோம்.
எங்களின் அன்பிற்குரியவர்களுடன் நாங்கள் நாட்களை செலவிடுவதற்கு நீங்கள் தான் காரணம். உங்களால் தான் நாங்கள் மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். உங்களை எங்களின் முக்கியமான நாளில் அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். கண்டிப்பாக நீங்கள் வர வேண்டும். அன்புடன் ராகுல் மற்றும் கார்த்திகா" என எழுதி அனுப்பி உள்ளனர்.
கேரள ஜோடியின் திருமண அழைப்பிதழ் தொடர்பான புகைப்படங்களை சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இந்திய ராணுவம், "உங்களின் திருமணத்திற்க்கு இந்திய ராணுவத்தை அழைத்ததற்கு நாங்கள் நன்றி சொல்கிறோம். மேலும் உங்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதற்கு வாழ்த்துகிறோம்" என வாழ்த்தி குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டை பாதுகாக்கும் ராணுவத்தினரை தங்களின் திருமணத்திற்கு ஒரு ஜோடி அழைத்தது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
