37,000 அடி உயரத்தில் பறந்த விமானம்.. கதவைத் திறக்க பார்த்த பெண்.. "அவங்க சொன்ன காரணத்த கேட்டதும் FLIGHTல இருந்தவங்க கதி கலங்கிட்டாங்க"
முகப்பு > செய்திகள் > உலகம்சுமார் 37,000 அடி உயரத்தில் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்த நிலையில் அதன் வாயில் கதவை திறக்க முற்பட்ட பெண்ணும், அதற்கு அவர் சொன்ன காரணமும் தற்போது உலக அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read | கடலுக்கு நடுவே தத்தளித்த நபர்.. பத்திரமாக மீட்டதும் சொன்ன விஷயம்.. அதிர்ந்து போன மீனவர்கள்!!
டெக்சாஸில் இருந்து கொலம்பஸுக்கு சவுத் வேஸ்ட் 192 என்ற விமானம் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட எலோம் அக்பெக்னினோ என்ற 34 வயதான பெண், விமானத்தில் இருந்த பணிப் பெண்ணை தள்ளிவிட்டு விமான கதவை திறப்பதற்காக சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தை கண்டதும் அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போகவே சக பயணிகள் சிலரும் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தவும் முற்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, தனது இருக்கையில் அமர்ந்து இருந்த எலோம், திடீரென விமானத்தின் பின்பக்க கதவுக்கு அருகே சென்று வெளியே பார்த்துக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
விமான பணிப்பெண் கழிவறைக்கு செல்லுங்கள் என்றும் அல்லது உங்கள் இருக்கைக்கு மீண்டும் சென்றிருங்கள் என்றும் சொல்லவே, அதனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாத எலோம், தொடர்ந்து கதவு வழியாக வெளியே உற்றுப் பார்ப்பதையும் தொடர்ந்திருக்கிறார் என கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் பணிப்பெண்ணைக் கடந்து பின்பக்க கதவை திறக்கவும் எலோம் முயன்றிருக்கிறார். உடனடியாக விமான ஊழியர்கள் பின்பக்க கதவருகே விரைந்து செல்ல, பயணி ஒருவரும் அவர்களுடன் சென்றதாக கூறப்படுகிறது. அதே போல விமான கதவை தான் திறப்பதை தடுத்த நபரை எலோம் கடித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது. இந்த சம்பவத்தால் சுமார் 30 ஆயிரம் அடி உயரத்துக்கு மேல் பறந்து கொண்டு இருந்த விமானத்தில் இருந்தவர்கள் மத்தியில் கடும் பதற்றமும் நிலவியது.
இதன் காரணமாக அருகே இருந்த விமான நிலையத்தில், விமானமும் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, எலோமை போலீசார் கைது செய்து நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக நடந்த விசாரணையில், ஜீசஸ் என்னை ஓஹியோவுக்கு பறக்கச் சொன்னார் என்றும் ஜீசஸ் விமானத்தின் கதவை திறக்கச் சொன்னார் என்றும் திரும்பத் திரும்ப எலோம் சொல்லிக் கொண்டு தனது தலையை இடித்துக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விமானத்திலிருந்த பெண் ஒருவர் ஜீசஸ் அழைத்ததாக கதவை திறந்து வெளியேற முற்பட்ட சம்பவம், அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது.