39 ஆண்டுகளுக்கு முன்.. 4 மாத இடைவெளியில் கொலை செய்யப்பட்ட இரண்டு பெண்கள்.. இத்தனை நாள் கழிச்சு வழக்கில் நடந்த ட்விஸ்ட்!!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த 39 ஆண்டுகளுக்கு முன் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தற்போது தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
கனடா நாட்டின் ரொரன்றோ என்னும் பகுதியில் தான் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. 1983 ஆம் ஆண்டு, அந்த சமயத்தில் வளர்ந்து வரும் ஃபேஷன் டிசைனராக இருந்த Erin Gilmour (வயது 22) என்ற இளம்பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. எரின் இறந்து சுமார் 4 மாதங்கள் கழித்து Susan Tice (வயது 45) என்ற சமூக சேவகியும் அத்துமீறப்பட்டு கத்தியால் கொலை செய்யப்பட்டிருந்தார்.
எரின் மற்றும் சூசன் ஆகிய இரண்டு பேரும், நான்கு மாத இடைவெளியில் கொல்லப்பட்டிருந்தாலும் இந்த இரு வழக்குகளிலும் ஒரு சம்மந்தம் இருப்பது கடந்த 2000 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. அதாவது, DNA சோதனைகள் அடிப்படையில் இரண்டு குற்றங்களையும் ஒரே நபர் செய்தார் என்பதும் தெரிய வந்ததாக தகவல்கள் கூறுகின்றது.
அப்படி ஒரு சூழலில், சுமார் 39 ஆண்டுகள் கழித்து இந்த இரண்டு குற்றங்களுக்கும் தொடர்புடைய நபரையும் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ரொரன்றோ என்னும் பகுதியில் வாழ்ந்து வந்த ஜோசப் ஜார்ஜ் சுதர்லாண்ட் என்ற 61 வயது நபர் தான், எரின் மற்றும் சூசன் ஆகியோரின் கொலைக்கு காரணம் என்றும் தகவல்கள் கூறுகின்றது.
எரின் மற்றும் சூசன் ஆகியோர் கொலை வழக்கில் ஜோசப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், இந்த நாளுக்காக தான் காத்திருந்தததாகவும் எரினின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
மேலும் எரின் மற்றும் சூசன் ஆகியோர் கொலை தொடர்பாக போலீசார் விசாரித்து வந்த சமயத்தில், DNA காரணமாக ஒரு குடும்பத்தினர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழவே, தொழில்நுட்ப உதவியுடன் அது ஜோசப் தான் என்றும் போலீசார் உறுதி செய்துள்ளனர். இத்தனை நாட்கள் அவர் ரொரன்றோ பகுதியில் தான் வாழ்ந்து வந்துள்ளார் என்றும் தகவல் தெரிவிக்கும் நிலையில், வழக்கு தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள தடைகள் காரணமாக இதற்கு மேல் இந்த வழக்கு குறித்து விவரங்களை வெளியிட முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 39 ஆண்டுகளுக்கு முன் நடந்த இரண்டு பெண்கள் கொலையில், குற்றவாளியாக கருதப்பட்ட நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள செய்தி, அதிகம் வைரலாகி வருகிறது.
Also Read | ஒரே ஒரு கொசுவால்.. கோமாவுக்கு போன இளைஞர்.. "கூடவே 30 ஆபரேஷனும்".. மனதை ரணமாக்கும் பயங்கரம்!!