திருமணத்தை மீறிய உறவு.. பக்கத்து வீட்டுக்காரருடன் சேர்ந்து மனைவி போட்ட பயங்கர பிளான்.. 4 வருஷத்துக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட கணவரின் சடலம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாசியாபாத்தில் கணவரை கொலை செய்து காதலன் வீட்டில் புதைத்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
Also Read | வேற லெவலில் வைரலாகும் புதுமனை புகுவிழா அழைப்பிதழ்! end பஞ்ச் தான் ஹைலைட்டே
உத்திர பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள சிக்ரோட் கிராமத்தை சேர்ந்தவர் சந்திர வீர். இவருக்கு திருமணமான நிலையில் தனது மனைவி சவிதாவுடன் இப்பகுதியில் வசித்து வந்திருக்கிறார். இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி மர்மமான முறையில் வீர் காணாமல்போனதாக அவருடைய மனைவி காசியாபாத் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். மேலும் கணவரின் சகோதரர் அவரை கடத்தியதாக சந்தேகிப்பதாகவும் சவிதா தனது புகாரில் குறிப்பிட்டிருந்திருக்கிறார். இதனையடுத்து, போலீசார் இதுகுறித்த விசாரணையில் இறங்கினர்.
ஆனால், இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் ஆண்டுகள் சென்றுவிட்டன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் காசியாபாத் காவல்துறையினருக்கு இந்த வழக்கு தொடர்பாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில், போலீசார் இந்த வழக்கு குறித்த விசாரணையில் மீண்டும் இறங்கினர். அப்போது, சவிதாவை சந்தேக வளையத்திற்குள் கொண்டுவந்த போலீசார் அவரை விசாரிக்க பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
சவிதாவுக்கும் அவரது அண்டை வீட்டில் வசித்துவரும் அருண் எனும் அனில்குமாருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது சந்திர வீருக்கு தெரிந்ததால் இருவரையும் அவர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் தனது காதலன் அருணுடன் இணைந்து கணவரை சவிதா கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. மேலும், கணவரின் உடலை அருணின் வீட்டில் புதைத்திருக்கின்றனர் இருவரும்.
இதனையடுத்து, அருணின் வீட்டில் ஆய்வை தொடர்ந்த போலீஸ் அதிகாரிகள், எலும்பு கூடுகளை கண்டறிந்துள்ளனர். இதனை தொடர்ந்து சவிதா மற்றும் அருண் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
4 வருடங்களுக்கு முன்னர், மாயமான நபரை அவரது மனைவியே கொலை செய்து காதலனின் வீட்டில் புதைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று நடை திறப்பு.. மண்டல, மகர பூஜையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!