நண்பரின் திருமணத்திற்கு.. சேலையில் வந்த அமெரிக்கர்கள்..😍 பட்டையை கிளப்பிட்டாங்க!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Nov 16, 2022 12:25 PM

பொதுவாக, ஒரு திருமணம் என்று வந்து விட்டாலே அதனை சுற்றி நடக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் பெரிய அளவில் பேசு பொருளாக கூட மாறும்.

american men dress up saree for best friends wedding viral

Also Read | வேற லெவலில் வைரலாகும் புதுமனை புகுவிழா அழைப்பிதழ்! end பஞ்ச் தான் ஹைலைட்டே

திருமணத்திற்கான போட்டோ ஷூட் தொடங்கி, திருமண அழைப்பிதழ் வரை ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வார்கள்.

சமீபத்திய காலகட்டத்தில் கூட, திருமணம் தொடர்பான அழைப்பிதழ்கள், போட்டோஷூட் புகைப்படங்கள் என இணையத்தில் அதிகம் ட்ரெண்ட் ஆவதை நாம் பார்த்திருப்போம்.

american men dress up saree for best friends wedding viral

அது மட்டுமில்லாமல், மிகவும் புதுமையான வகையில் இந்த விஷயங்கள் இருப்பதன் காரணமாக அவை இணையவாசிகள் மத்தியில் வைரல் ஆவதை கூட தவறுவதில்லை. சமீபத்தில் கூட மாப்பிள்ளையின் நண்பர்கள், மணப்பெண்ணுக்கு கண்டிஷன் போட்டது தொடர்பான விஷயம் கூட அதிக கவனம் பெற்றிருந்தது.

american men dress up saree for best friends wedding viral

இந்த நிலையில், தற்போது சிகாகோ பகுதியில் இந்திய ஜோடிக்கு திருமணம் நடந்த போது உடை குறித்த பாகுபாடுகளை உடைத்து அவர்களின் நண்பர்கள் செய்த விஷயம், உலக அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், அமெரிக்காவை சேர்ந்த வெளிநாட்டு நபர்கள் இரண்டு பேர், அவரது நண்பரான மணமகனுக்காக சேலை அணிந்து கொண்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்டது தெரிகிறது.

american men dress up saree for best friends wedding viral

மேலும் சேலை அணிந்து கொண்டு சிகாகோ வீதியில் நடந்து சென்று மணமகனுக்கு சர்ப்ரைஸும் கொடுக்கின்றனர். தனது நண்பர்கள் சேலை அணிந்து கலந்து கொண்டதை பார்த்ததும் ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் உறைந்த மணமகன் அவர்களை கட்டித் தழுவி நெகிழவும் செய்திருந்தார். அதே போல, மணமகனின் இரண்டு நண்பர்களுக்கும் சேலை உடுத்தும் காட்சிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

american men dress up saree for best friends wedding viral

ஆண், பெண் என்ற பேதம் கடந்து உடைகள் என்பதில் பாகுபாடு இல்லை என்பதை உணர்த்தும் விதமாக சிகாகோவில் வைத்து இரண்டு வாலிபர்கள் சேலை உடுத்தி வந்த சம்பவம், உலக அளவில் வைரல் ஆகவும் மாறி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது நெட்டிசன்கள் பலரும் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், திருமண ஜோடிக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | 250 பெண்களை வரன் பார்க்க குவிந்த 11 ஆயிரம் பேர்.. ஒரே நாளில் ட்ரெண்ட் ஆன சம்பவம்!!

Tags : #AMERICAN #AMERICAN MEN #DRESS UP #SAREE #FRIENDS #WEDDING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. American men dress up saree for best friends wedding viral | World News.