"கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்த மனுஷன்".. கொஞ்ச நாளில் மாறுன கோடீஸ்வர இளைஞர் வாழ்க்கை..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Nov 09, 2022 03:58 PM

பொதுவாக ஒருவரது வாழ்க்கையில் எப்போது எந்த சம்பவம் அரங்கேறும் என்பதை நிச்சயம் கணிக்கவே முடியாது.

nigeria millionaire man life changed after his wedding

Also Read | தமிழில் பேசி பட்டையை கிளப்பிய சூர்யகுமார்.. வீடியோவை பார்த்து ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!!

சீராக வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் வேளையில் நிச்சயம் நாம் எதிர்பாராத பிரச்சனைகள் ஏதாவது நம்மை தேடி வரும். மறுபக்கம் பிரச்சனைகளுடன் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் போது கொஞ்சம் கூட நினைத்து பார்க்காத வேளையில் பெரிய மகிழ்ச்சியான தருணம் ஒன்றும் நடைபெறும்.

அப்படி ஒரு சூழலில் நைஜீரியா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரின் திருமணம் முடிந்த பின்னர் நேர்ந்த சம்பவம், அவரது வாழ்க்கையையே தலை கீழாக புரட்டி போட்டுள்ளது.

நைஜீரியா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. முன்னதாக, திருமணத்திற்கு முன்பு தொழிலதிபராக இருந்த அந்த இளைஞர் பெரும் கோடீஸ்வரராகவும் வலம் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஒவ்வொரு மாதமும் பல பில்லியன் பணம் சம்பாதித்து வந்த இளைஞர், தனது திருமணத்தையும் மிக மிக ஆடம்பரமாக நடத்த திட்டம் போட்டுள்ளார்.

nigeria millionaire man life changed after his wedding

கோடீஸ்வர தொழிலதிபரான அந்த இளைஞரின் தொழிலில் அவரது நண்பர்கள் சிலரும் முதலீடு செய்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழலில் அவர்களது தொழில் வீழ்ச்சி அடையவும் ஆரம்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதற்கு மத்தியில் அந்த இளைஞரின் திருமண தேதியும் நெருங்கி வந்த நிலையில் அதற்காக மிக மிக ஆடம்பரமான முறையில் தனது திருமணத்தையும் பணத்தை செலவு செய்து திருமணத்தையும் நடத்தி உள்ளார் அந்த இளைஞர். மேலும் முதலீடு செய்த நண்பர்களுக்கு பணத்தை கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஏராளமான விருந்துகள், அனைவருக்கும் பரிசு, சொகுசு கார் உள்ளிட்ட பல ஆடம்பரம் செலவும் இந்த திருமணத்தில் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து திருமணத்திற்கு பின்னர் தனது தொழில் முன்னேற்றம் கண்டு நிலைமையை சரி செய்து விடலாம் என்றும் அவர் கருதி உள்ளதாக கூறப்படுகிறது.

nigeria millionaire man life changed after his wedding

ஆனால் திருமணம் முடிந்து பல நாளாகியும் தொழிலில் பெரிய அளவில் லாபம் ஈட்ட முடியாமல் தற்போது பெரிய கடனாளியாகவும் அவர் மாறி உள்ளார். இந்த நிலையில் தன் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு இத்தனை ஆடம்பரமாக தனது திருமணத்தை நடத்தியது தான் என்றும் கூறி அந்த இளைஞர் நொந்து போய் உள்ளார். ஆடம்பர திருமணம் காரணமாக தனது வாழ்வில் பெரும் சிக்கலை அனுபவித்து வரும் கோடீஸ்வர இளைஞர் தொடர்பான செய்தி இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் நீங்கள் எப்படி இதற்கு முன் வாழ்வில் முன்னேறினீர்களோ அதே போல மீண்டும் சொந்த காலில் நின்று ஜெயிப்பீர்கள் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Also Read | இத எல்லாம் எப்பவோ பண்ணிட்டாரு".. 8 வருசத்துக்கு முன்னாடியே சூர்யகுமார் அடிச்ச அடி.. வைரல் சம்பவம்!!

Tags : #NIGERIA #NIGERIA MILLIONAIRE MAN #WEDDING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Nigeria millionaire man life changed after his wedding | World News.