மகளை சுட்டுக் கொன்ற தந்தை, உடலை சூட்கேசில் வைத்து மறைக்க உதவிய தாய்.. உறைய வைக்கும் ஆணவக்கொலை.!
முகப்பு > செய்திகள் > இந்தியாசூட்கேஸ் ஒன்றிற்குள் இளம்பெண் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இதற்கான காரணம் குறித்து தெரிய வந்த விஷயம் பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், மதுரா பகுதியில் யமுனா விரைவுச் சாலை அருகே கடந்த சில தினங்களுக்கு முன் சூட்கேஸ் ஒன்று கிடந்தது.
இது தொடர்பாக சம்பவ இடம் வந்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்த பெட்டிக்குள் இளம்பெண் ஒருவரின் உடல் இருப்பதும் தெரிய வந்தது.
சூட்கேஸை போலீசார் மீட்ட பிறகு, அந்த இளம்பெண்ணை அடையாளம் காணும் முயற்சிகளில் இறங்கி இருந்தனர். இதற்காக பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியும், சிசிடிவி காட்சிகளை சரி பார்த்தும் என பல முயற்சிகள் மூலம் போலீசார் அந்த இளம்பெண்ணை அடையாளம் காண முயன்று வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சில நாட்கள் கழித்து அந்த பெண்ணின் உறவினர்களிடம் இருந்து போலீசாருக்கு அழைப்பு வந்துள்ளது. இதன் பின்னர் தெரிய வந்த விவரத்தின் அடிப்படையில், அந்த இளம்பெண் பெயர் ஆயுஷி சவுத்ரி என்பதும், டெல்லியில் கல்லூரி படிப்பு படித்து வந்ததும் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தெற்கு டெல்லியில் உள்ள படர்பூரில் வசிக்கும் பெண்ணின் தந்தை நிதேஷ் யாதவ் மற்றும் தாயார் மகளின் உடலை அடையாளம் காண சென்றுள்ளதாக தெரிகிறது. அப்போது, அவர்கள் கண்ணீர் வடித்துக் கொண்டே இருந்ததாக கூறப்படும் வேளையில், மகள் காணாமல் போனதாக ஒரு புகார் கூட கொடுக்கவில்லை என்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர. இதனால், அவர்கள் மீது சந்தேகத்துடன் போலீசார் விசாரித்த சமயத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
தனது குடும்பத்தினர் யாரிடமும் கூறாமல் வேறொரு சமுதாயத்தை சேர்ந்த இளைஞரை ஆயுஷி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், அடிக்கடி இரவு வரை வெளியில் இருந்து தாமதமாக வீட்டிற்கு திரும்புவதை ஆயுஷி வழக்கமாக கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், மகள் மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார் நிதேஷ்.
தாங்கள் சொன்னதை காதில் போட்டுக் கொள்ளாமல், விருப்பம் போல மகள் ஆயுஷி இருந்ததால் உரிமம் பெற்ற துப்பாக்கி கொண்டு மகள் என்றும் பாராமல் அவரை நிதேஷ் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், தனது மனைவி உதவியுடன் மகள் ஆயுஷி உடலை சூட்கேஸில் அடைத்து மதுரா பகுதியில் வீசியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அங்கு கிடந்த சூட்கேஸ் குறித்து தொழிலாளர்கள் சிலர் போலீசாருக்கு தகவல் கொடுக்க, உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த ஆயுஷியின் உடலையும் போலீசார் மீட்டெடுத்தனர். பெற்றோர்களே மகளை கொன்றதாக தெரிய வந்த விஷயம், கடும் அதிர்வலைகளை உண்டு பண்ணி உள்ளது.

மற்ற செய்திகள்
