தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'மிகுந்த வேதனை'... எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் 'வீர வணக்கம்!'.. யார் இந்த 'பழனி?'
முகப்பு > செய்திகள் > இந்தியாலடாக்கில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார்.

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நேற்று சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய அதிகாரி உட்பட 3 பேர் இந்திய தரப்பில் வீரமரணம் அடைந்தனர். சீனா-இந்தியா இடையே தொடர்ச்சியாக எல்லைப் பிரச்னை இருந்து வரும் நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தையும் நடந்தது. ஆனாலும், தற்போது தாக்குதல் நடத்தப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சீன ராணுவத்தின் இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி என்பவரும் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்த கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கு வயது 40. அவரது சகோதரர் ஒருவரும் 10 வருடம் ராணுவத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவை ஒட்டி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் முதல்வர் கூறியிருப்பதாவது, "#LadakhBorder பகுதியில் சீன இராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் - கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழக வீரர் திரு.பழனி அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். வீரமரணம் எய்திய பழனி அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்!" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின், "லடாக்கில் நடந்துவரும் மோதலில் இன்னுயிர் ஈந்த இந்திய இராணுவ வீரர்கள் மூவரின் தியாகத்துக்கு வீரவணக்கம்!
22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி, தனது உயிரையும் ஈந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!"
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
#LadakhBorder பகுதியில் சீன இராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் - கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழக வீரர் திரு.பழனி அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். வீரமரணம் எய்திய பழனி அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்!
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) June 16, 2020

மற்ற செய்திகள்
