‘நண்பன் மனைவியுடன் தொடர்பு’.. ஜாமீனில் வெளியே வந்த கணவன்.. சென்னை வாலிபருக்கு நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் நண்பனின் மனைவியுடன் தொடர்பில் இருந்த நபரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார் (30). இவர் திருவொற்றியூரில் மீன் வியாபாரம் செய்து வந்தார். கணேஷ்குமார் கடந்த 5 மாதங்களாக திருவள்ளூர் மாவட்டம் மீச்சூர் பகுதியில் சபரிதா என்ற பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று 4 பேர் கொண்ட கும்பல் கணேஷ்குமார் வீட்டுக்கு வந்து அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து அங்கிருந்து தப்பியுள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே பசுபதி என்பவர் தனது 2 கூட்டாளிகளுடன் மீஞ்சூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தெரிவித்த போலீசார், கணேஷ்குமாரும், பசுபதியும் நண்பர்களாக இருந்துள்ளனர். இவர்கள் இருவர் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் சேர்ந்து செங்குன்றத்தை சேர்ந்த தொழிலதிபரை கடத்தி 6 லட்ச ரூபாய் பறித்துள்ளனர். கணேஷ்குமார் அடிக்கடி பசுபதியின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.
இதில் பசுபதியின் மனைவி சபரிதாவுக்கும், கணேஷ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பசுபதிக்கும், சபரிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கணவரை பிரிந்த சபரிதா மீஞ்சூர் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே வழக்கு ஒன்றில் கைதான பசுபதி சிறைக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் கணேஷ்குமாரும், சபரிதாவும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இந்த தகவல் சிறையில் இருந்த பசுபதிக்கு தெரிய வர ஆத்திரமடைந்துள்ளார். இதனை அடுத்து ஜாமீனில் வெளியே வந்த பசுபதி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கணேஷ்குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி சம்பவத்தன்று சபரிதாவுடன் வீட்டில் இருந்த கணேஷ்குமாரை கொலை செய்ததாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்
