"மிரட்டுனா பணியுற ஆளு நாங்க இல்ல..." '18 லட்சம் கோடி' வர்த்தகம் போனாலும் 'பரவால்ல...' சீனாவுக்கு 'கெத்து' காட்டிய 'நாடு...'
முகப்பு > செய்திகள் > உலகம்'ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் சீனாவின் மிரட்டல் மற்றும் வற்புறுத்தலுக்காக, ஒருபோதும் எங்கள் மதிப்பை விற்க தயாராக இல்லை,'' என, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து, மாட்டு இறைச்சி மற்றும் பார்லி ஆகியவற்றை, சீனா அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. இதன் மூலம் சீனா, - ஆஸ்திரேலியா இடையே, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலம், ஆண்டொண்றுக்கு, 18 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, வர்த்தகம் நடக்கிறது.
இந்நிலையில், 'கொரோனா' தொற்று விவகாரத்தில், சீனா அலட்சியமாக செயல்பட்டதால் தான், இன்று உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஆஸ்திரேலியா சமீபத்தில் குற்றம்சாட்டியது.'இது தொடர்பாக, சர்வதேச விசாரணை தேவை' என, ஆஸ்திரேலிய அரசு வலியுறுத்தியது.
இதையடுத்து, ஆஸ்திரேலியாவை மிரட்டும் வகையில், மாட்டு இறைச்சி இறக்குமதிக்கு சீனாதடை விதித்தது. பார்லி இறக்குமதிக்கு, அதிக வரி விதிக்கப்பட்டது. மேலும், 'ஆஸ்திரேலியாவுக்கு சென்று படிப்பதை, சீன மாணவர்கள் தவிர்க்க வேண்டும்' என, சீனா தெரிவித்துள்ளது. சீன சுற்றுலா பயணிகளும், ஆஸ்திரேலியா செல்வதை தவிர்க்க வேண்டுமென, சீன அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கை குறித்து, ஆஸ்திரேலிய பிரதமர், ஸ்காட் மோரிசனிடம், செய்தியாளர்கள் கேட்டபோது, ''நாங்கள் வெளிப்படையாக வர்த்தகம் மேற்கொள்ளும் நாட்டைச் சேர்ந்தவர்கள். எனவே, தேவையற்ற மிரட்டல் மற்றும் வற்புறுத்தல்களுக்காக, எங்கள் மதிப்பை விற்க தயாராக இல்லை,'' எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
