"புதிய வகை வைரஸ் பரவுகிறதா?..." சீனாவில் ‘போர்க்கால எமர்ஜென்சி’ அமல்... 'கோவிட்-19' அறிகுறிகள் 'தென்படாததால் அதிர்ச்சி...'
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவின் பெய்ஜிங் நகரில் கொரோனா வைரஸின் மற்றொரு வகை திடீரென பரவத் தொடங்கியுள்ளதால் போர்க்கால எமர்ஜென்சி உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸின் புதிய வகை ஒன்று பரவத் தொடங்கியுள்ளது. இதுவும் மார்க்கெட்டில் இருந்து தான் பரவியுள்ளது. குறிப்பாக அறிகுறிகள் எதுவும் தெரியாமல் தாக்கிக் கொண்டிருக்கிறது. இதையொட்டி பெய்ஜிங்கில் உச்சக்கட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து சமீபத்தில் தான் சீனா படிப்படியாக மீண்டு வந்தது. இதனால் அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்நிலையில் சீனாவில் மீண்டும் வைரஸ் பரவத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இது உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையாக இருக்குமோ என்று அஞ்சப்படுகிறது. சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள மிகப்பெரிய மொத்த விற்பனை மார்க்கெட்டான ஷின்ஃபாடிக்கு சென்று வந்தவர்கள் 517 பேருக்கு சமீபத்தில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.
அதில் 45 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் யாருக்கும் கோவிட்-19 அறிகுறிகள் தென்படவில்லை என்பது அதிர்ச்சியூட்டும் விஷயமாக இருக்கிறது.
இதுதொடர்பாக பெங்டாய் நகரின் செய்தித் தொடர்பாளர் சு ஜுன்வேய் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "பெய்ஜிங்கில் போர்க்கால எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதிய வைரஸ் பரவத் தொடங்கியிருக்கிறது. பெய்ஜிங்கில் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ள 6 பேர் ஷின்ஃபாடி மார்க்கெட்டிற்கு சென்று வந்தவர்கள் தான். இதன் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகள், சுற்றுலா தொடர்பான விஷயங்கள் அனைத்தும் உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
வைரஸ் பரவலின் காரணமாக ஷின்ஃபாடி மார்க்கெட்டை சுற்றியுள்ள 11 பகுதிகளில் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. புதிய வகை வைரஸ் தொற்று மார்க்கெட்டின் அபாயகரமான சூழலில் இருந்து பரவியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அல்லது ஏற்கனவே வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களிடம் இருந்து பரவியிருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
முன்னதாக வைரஸ் பரவாமல் தடுக்க ஷின்ஃபாடி மார்க்கெட்டில் மாமிசம் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதேபோல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மொத்த விற்பனை மார்க்கெட்கள் மூடப்பட்டன. குறிப்பாக பெய்ஜிங்கின் முக்கிய சூப்பர் மார்க்கெட்களில் இருந்து சல்மா மீன்களை அப்புறப்படுத்தி விட்டனர். ஏனெனில் இறக்குமதி செய்யப்பட்ட சல்மான் மீன்களை வெட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட போர்டில் கோவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டது.
புதிய வைரஸ் பாதிப்புகளால் பள்ளிகள் திறப்பை அரசு ஒத்திவைத்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சீனாவில் 11 பேருக்கு புதிய வகை கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மற்ற நாடுகளும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.

மற்ற செய்திகள்
