"சென்னை தொடர்பான இ-பாஸ் நிறுத்தப்படுகிறதா?".. தமிழக அரசு விளக்கம்! உள்தமிழகத்துக்கு படையெடுக்கும் சென்னைவாசிகள்.. திருப்பி அனுப்பும் போலீஸார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னைக்கு இபாஸ் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலும் தவறானது என்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அரசின் உத்தரவை மக்கள் மதிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் பேசும்போது கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, சென்னையில் இன்று மட்டும் 1,479 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,924 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே சென்னையில் இருந்து கும்பல் கும்பலாக படையெடுத்து ஆட்டோவிலும், பைக்குகளிலும் பலரும் சென்னையக் கடந்து செல்ல முயற்சித்து வருவதாகவும், அவர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்திய போலீஸார், அவசியமற்ற தேவைகளுக்ககாக செல்வோர்களையும், இ-பாஸ் இன்றி செல்வோரையும் சென்னைக்கு திருப்பி அனுப்பி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.