"சீனாவுக்கு வந்த இன்னொரு சோதனை!".. 'கதிகலங்கவைத்த' 18 பேரின் 'மரணம்'.. 189 பேர் படுகாயம்!
முகப்பு > செய்திகள் > உலகம்எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி நெடுஞ்சாலையில் கவிழ்ந்து வெடித்து விபத்துக்குள்ளாகியதில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சீனாவின் ஷென்யாங்-ஹாய்கு விரைவு நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி ஒன்று எரிவாயுவினை ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது ஷாங்காயில் உள்ள ஷிஜியாங் பகுதியில், எதிர்பாராத விதமாக தடுமாறி அங்குள்ள தொழிற்சாலையில் லாரி விழுந்தது. அப்போது பயங்கர சத்தத்தில் லாரியும், லாரியில் இருந்த எரிவாயு டேங்கரும் வெடித்துச் சிதறியதில் தொழிற்சாலை தீப்பற்றி எரிந்ததோடு, அருகில் இருந்த கட்டடங்களும் சேதமடைந்தன. இதில் 18 பேர் உயிரிழந்ததோடு, 189 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதில் தற்போது 6 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனிடையே விபத்து நடந்தபோது அருகாமையில் இருந்த வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது வீட்டின் ஜன்னல் உடைந்ததாகவும், ஆனால் தனக்கும் தனது தாய் மற்றும் சகோதரருக்கும் எதுவும் ஆகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
