'மறுபடியும் மொதல்ல இருந்தா....' 'சீனாவில் 106 பேருக்கு கொரோனா...' 'ஸ்பீடா பரவிட்டு இருக்காம்...' அங்கேயும் லாக்டவுன் சொல்லிட்டாங்க...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பாதிப்பால் 5 நாட்களில் சுமார் 106 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டதால் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது சீன அரசு.

சீனாவின் உஹான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் பலவற்றை நிலைகுலைய செய்துள்ளது எனலாம். தற்போது வெகு சில நாடுகளே கொரோனா தொற்றை ஒழித்ததாக மகிழ்ச்சியடைந்து வருகிறது. சீனாவும் சில வாரங்களுக்கு முன் சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு, ஊரடங்கை தளர்த்தியது மேலும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையினை நடத்த தொடங்கினர். வெளிநாடுகளில் இருந்து சீனா வருபவர்களுக்கு மட்டுமே தற்போது கொரோனா தொற்று உள்ளது என்றும் அறிவித்தது.
இந்நிலையில் தற்போது சீனாவின் தலைநகரமான பீஜிங்கில் கொரோனா வைரஸ் தொற்று ‘மிகத் தீவிரமாக' மாறி வருகிறது என பீஜிங் நகரின் அரசு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். அதிக மக்கள் தொகை கொண்ட பீஜிங்கின் ஷின்ஃபாடி மொத்த உணவுச் சந்தையில் இருந்துதான் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பீஜிங்கில் இருந்து நகரை வீட்டு வெளியே செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் தடை விதித்துள்ளது. மேலும், உள் அரங்க விளையாட்டுகள் மற்றும் பொழுது போக்குக் கூடங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன
மேலும் கடந்த 5 நாட்களில் மட்டும் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 30 இடங்களில் லாக்டவுன் கட்டுப்பாடுகளை அரசு தரப்பு விதித்துள்ளது. மேலும் பீஜிங் நகரில் செயல்படும் உணவுச் சந்தைகளில் வேலை பார்ப்பவர்கள், அரசு கேன்டின்கள் நடத்துபவர்களுக்கும் கொரோனா சோதனை மேற்கொண்டு வருகிறது சீன அரசு. தினமும் பீஜிங் நகரில் மட்டும் சுமார் 90,000 பேருக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது.
பீஜிங் அருகேயுள்ள ஹீபே மாகாணத்திலும் சில கொரோனா வைரஸ் பாதித்தோரையும் கண்டறிந்துள்ளனர்.

மற்ற செய்திகள்
