"சென்னைக்கு மட்டும் அடுத்த லாக்டவுன் வருமா?".. பரபரப்பான சூழலில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!.. ‘இதெல்லாம்தான் பேசப்போறாங்க!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்திலேயே சென்னையில் கொரோனா தொற்று அதிகம் உள்ளதால், அடுத்த லாக்டவுன் சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களுக்கு மட்டும் இருக்குமா? என்கிற பல்வேறு சந்தேகங்களுக்கு மத்தியில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நிகழ்கிறது.

4 கட்ட லாக்டவுன் மற்றும் முதல்கட்ட அன்லாக்கை தொடர்ந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 17ஆம் தேதி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்நிலையில், இன்று நண்பகல் 12 மணிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கும் முன்னதாக காலை 11 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் அடுத்த கட்ட ஊரடங்கு குறித்த முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11.30 மணி அளவில் நடைபெறுகிறது.

மற்ற செய்திகள்
