கொஞ்ச நாள் முன்னாடி தான் 'கொரோனா' இல்லன்னு சொன்னாங்க... ஆனா இப்போ 2 பேருக்கு வந்துருக்கு... 'அதிர்ச்சி'யில் உறைந்த 'நாடு'!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் கடுமையாக பாதித்து வரும் நிலையில் சுமார் 50 லட்சம் மக்கள் தொகை கண்ட நாடான நியூசிலாந்து கடந்த வாரம் கொரோனா தொற்று இல்லாத நாடு என அதிகாரபூர்வமாக அறிவித்தது.
அதே போல அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்தி மக்கள் பணிக்கு மற்றும் அனைத்து தேவைகளுக்கும் செல்ல அனுமதியளித்தது. மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில், இன்று நியூசிலாந்து நாட்டில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பிரிட்டன் நாட்டிலிருந்து திரும்பியவர்கள்.
இதனையடுத்து நியூசிலாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்கள் இருவரையும் உடனடியாக தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். முன்னதாக தொடர்ச்சியாக 24 நாட்கள் கொரோனா தொற்று யாருக்கும் ஏற்படாத நிலையில் கொரோனா இல்லாத நாடு என அந்நாட்டு அதிபர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.