'மீன் வெட்ட பயன்படுத்தப்படும் பலகையிலிருந்து கொரோனா பரவியது எப்படி?'.. சீனாவைப் பிடித்த பிசாசு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Jun 15, 2020 05:36 PM

சீனா சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட சால்மன் என்ற மீன் வெட்ட பயன்படுத்தப்படும் பலகையில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

china beijing imposes lockdown ahead of next wave

சீனா தலைநகர் பீஜிங்கில் உள்ள மக்களின் வாழ்க்கை தொடர்ச்சியாக அதிகரிக்கும் புதிய கொரோனா வைரஸ் வழக்குகளால் பாதிக்கப்பட்டுள்ளது. பீஜிங் நகரில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் 45 பேரை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது தெரியவந்தது. இவர்களுக்கு அறிகுறிகள் இல்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சீன அரசு பீஜிங் நகரின் சில பகுதிகளை லாக்டௌன் செய்துள்ளது.

பீஜிங்கில் உள்ள ஜின்ஃபாடி மார்க்கெட்டுக்கு சென்றவர்கள்  கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட சால்மன் மீன்களை வாங்கியவர்களுக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. சால்மன் மீன்களில் இருந்து பரவியதா அல்லது அதை வெட்ட பயன்படுத்தப்பட்ட கத்தியிலிருந்து வைரஸ் பரவியதா என்று சீன அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சீன தொற்று நோய் மற்றும் நோய் தடுப்பு மையத்தின் தலைமை தொற்றுநோய் ஆய்வாளர் வூ சுன்யூ கூறுகையில், "தற்போதைக்கு  சந்தையில் எங்கிருந்து கொரோனா தொற்று பரவியது என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. சால்மன் மீன்களும் நோயை பரப்பியதாக சொல்ல முடியாது. ஏனென்றால், அவற்றை வெட்டப்பட்ட  கத்தியிலும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விற்பனையாளர் அல்லது அந்த கத்திகளை கொண்டு வந்தவர்களுக்கு கொரோனா தொற்று இருந்திருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாலூட்டிகளிடத்தில் இருந்துதான் எளிதாக பரவும். சால்மன் மீன்களிடத்தில் இருந்து பரவ வாய்ப்பில்லை எனவும் சொல்லப்படுகிறது. இது குறித்து ஷிங்குவா பல்கலைக்கழக வைராலஜி பேராசிரியர் செங் செங் கூறுகையில், "கொரோனா வைரஸ் உடலில் எளிதாக ஒட்டிக் கொள்ளக் கூடிய மூலங்கள் பாலுட்டிகளித்தில்தான் உள்ளன. மீன்களிடத்தில் இருப்பதாக இதுவரை அறியப்படவில்லை. லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில், கொரோனா வைரஸ் பாலூட்டிகளை பாதிக்கக்கூடும். மீன்கள், பறவைகள் அல்லது ஊர்வன வழியாக பாதிப்பை ஏற்படுத்தாது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்கிறார்.

இதற்கிடையே, 'குளோபல் டைம்ஸ்' வெளியிட்டுள்ள செய்தியில், ''சால்மன் மீன்களின் மொத்த விற்பனையாளரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதனால் , சந்தை முற்றிலும் மூடப்பட்டுள்ளது '' என்று கூறியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. China beijing imposes lockdown ahead of next wave | World News.