இந்திய-சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் மரணம்!.. எல்லாத்தையும் பண்ணிட்டு சீனா சொன்ன பதில் தான் 'ஆணவத்தின் உச்சம்!'
முகப்பு > செய்திகள் > இந்தியாலடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் படைகள் திரும்பபெறப்படும் செயல்முறையின் போது, இந்திய - சீன ராணுவத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்தனர்.

கிழக்கு லடாக் பகுதியில் இந்திய-சீன படைகள் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த மாதம் 5-ந் தேதி இந்திய படைகளும், சீன படைகளும் மோதிக்கொண்டதால் எல்லையில் பதற்றம் அதிகரித்தது.
அதன்பின், கடந்த 6-ந் தேதி இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், கருத்தொற்றுமை ஏற்பட்டதால், எல்லையில் இரு நாட்டு படைகளும் பின்வாங்கிச் சென்றன. மேலும், படைப்பிரிவு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லடாக் எல்லைப்பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இரு தரப்பு படைகளுக்குமிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். 1975க்கு பிறகு சீனாவுடன் மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டதாக இந்திய ராணுவம் கூறி உள்ளது. அமைதியை ஏற்படுத்த அப்பகுதியில் இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய ராணுவம் எல்லையைத் தாண்டி சீனப் படைகளைத் தாக்கியதாக சீனா குற்றம்சாட்டி உள்ளது. இத்தகவலை ஏஎப்பி நியூஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ளது.
இந்திய வீரர்கள் உயிரிழப்பைத் தொடர்ந்து, இந்தியா அடுத்தகட்டமாக ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை எடுக்கவோ அல்லது சிக்கலைத் தூண்டவோ கூடாது என சீன வெளியுறவு அமைச்சகம் கூறியிருக்கிறது.
இதற்கிடையே, இந்திய-சீன படைகள் மோதல் தொடர்பாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் இதில் பங்கேற்றனர். கிழக்கு லடாக்கில் நடந்த மோதல் குறித்தும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மற்ற செய்திகள்
