கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தீவிரப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என தகவல் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே மீண்டும் முழு ஊரடங்கு தீவிரப்படுத்தப்படுமா என்று விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த நிலையில் டெல்சா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின் பேசிய முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு விளக்கமளித்தார். அதில்,‘தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு என்ற தகவல் வதந்தி. தமிழக அரசு அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. வதந்தி பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என முதல்வர் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
