சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கான காரணம் என்ன...? புதிய கோணத்தில் அதிவேகமெடுக்கும் போலீசாரின் விசாரணை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் சினிமா தொழிலில் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளாரா என்ற கோணத்தில் மும்பை போலீசார் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
34 வயதான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் மாதம் கடந்த 14 ஆம் தேதி (ஞாயிற்று கிழமை) தன் வீட்டு படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது. அவரது தற்கொலைக்கு மன அழுத்தம், தனிமை உணர்வு என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் தற்போது மும்பை போலீசார் தொழில் முறை போட்டி என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் சுஷாந்த்தின் உறவினர்கள் சிலர் இது கொலையாக இருக்கும் எனவே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், சுஷாந்த் சிங் மரணத்திற்கான காரணத்தையும் பிரேத பரிசோதனை அறிக்கையும் உடனடியாக சமர்பிக்க கோரினர். அதன்படி பிரேத பரிசோதனை அறிக்கையில் ராஜ்புத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போதய ஊடகங்களில் சுஷாந்த் சிங் சினிமாவில் ஏற்பட்ட போட்டி காரணமாக அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்ததையடுத்து, இந்த கோணத்தையும் மும்பை காவல்துறை விசாரிக்கும் என தேஷ்முக் உறுதியளித்துள்ளார்.
விசாரணையின் ஒரு பகுதியாக, பாந்த்ரா காவல் நிலையம், குற்றப்பிரிவு-சிஐடி மற்றும் தடயவியல் துறை ஆகியவற்றிலிருந்து தனி குழுக்கள் சுஷாந்த்தின் பாந்த்ரா பிளாட்டை பார்வையிட்டு சோதனை நடத்தினர்.
மேலும் சுஷாந்தின் குடும்ப உறுப்பினர்கள் திங்கள்கிழமை காலை, பாட்னாவிலிருந்து மும்பைக்கு வந்து, பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று மருத்துவமனையில் இருந்த சுஷாந்தின் உடலை மீட்டனர். மேலும் வைல் பார்லே கல்லறையில் சில ஊடகவியலாளர்கள், காவல்துறையினர் மற்றும் ஒரு சில ரசிகர்கள் கலந்து கொண்டு பலத்த மழையின் நடுவே சுஷாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேலும் திங்கள்கிழமை வெளிவந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் மூச்சுத்திணறல் மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது. மேலும் சுஷாந்த்தின் நெருங்கிய நண்பர்களான ரியா சக்ரவர்த்தி மற்றும் மகேஷ் ஷெட்டி ஆகியோரையும் போலீசார் விசாரித்துள்ளனர், மேலும் சில நபர்கள் விசாரிக்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.