'தண்ணி' எடுக்க போன புள்ள... ரொம்ப நேரமா ஆள 'காணோம்னு' தேடிப்போன பெற்றோர்... 'சிறுமிக்கு' நடந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | May 19, 2020 05:06 PM

கந்தர்வகோட்டையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 13 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

13 yr old girl sexually assualted and died in Thanjavur

கந்தர்வகோட்டை அருகேயுள்ள 13 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டின் அருகேயுள்ள குளம் ஒன்றில் தண்ணீர் எடுக்க வேண்டி சென்றுள்ளார். தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் குளத்தின் அருகே சென்று சிறுமியை தேடியுள்ளனர். அப்போது குளத்தின் அருகே அந்த சிறுமி அலங்கோலமாக மயங்கிக் கிடப்பதை கண்டு குடும்பத்தினர் பதறி போயுள்ளனர்.

மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை அவரது பெற்றோர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று மதியம் முதல் அந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் அந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

போலீசார் விசாரணையில் அந்த சிறுமியை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து தப்பித்து சென்றதாக கூறப்படுகிறது. அந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தண்ணீர் எடுக்க சென்ற நிலையில் சிறுமியை கும்பல் ஒன்று பாலியல் வன்கொடுமை செய்ததால் அதில் சிறுமி உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.