‘குழந்தை படிப்பு செலவுக்கு பணம் கேட்ட மனைவி’.. கணவன் செய்த விபரீத செயல்..! சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 26, 2019 09:50 AM

சென்னையில் குழந்தை படிப்பு செலவிற்காக பணம் கேட்ட மனைவியை கணவன் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Husband killed his wife for asking money in Chennai

சென்னை கிழக்குக் கடற்கரை சாலை அருகே நீலாங்கரை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் தனசேகர். இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு அகிலா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியுள்ளது. திருமணமான சில மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் அகிலா தரமணியில் உள்ள தனது அண்ணன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று கணவரின் வீட்டிற்கு சென்ற அகிலா குழந்தையின் படிப்பு செலவுக்காக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தனசேகர் கத்தியால் அகிலாவை சரமாரியாக குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த அகிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து தனசேகர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அகிலாவின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதனை அடுத்து தப்பி சென்ற தனசேகரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : #WIFE #HUSBAND #CHENNAI #KILLED #MONEY