'சேஸ் பண்ணி, இளைஞர்கள் எடுத்த வீடியோ.. 'அதெப்படி நீங்க மறுக்கலாம்'.. போலீஸாருக்கு கிடைத்த தண்டனை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 22, 2019 01:48 PM

கேரளாவின் ஆலப்புழா அருகே, கூடுதல் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் கொண்ட போலீஸ் வண்டியினை வேகமாக சென்று மடக்கிப் பிடித்த இளைஞர்கள் சிலர் அவர்களை சீட் பெல்ட் போடச் சொல்லி அறிவுறுத்தியதோடு, இந்த செயலை வீடியோ எடுத்தும் இணையத்தில் பகிர்ந்தனர்.

kerala police transferred after refused youngsters advice

ஆனாலும் முதலில் போலீஸாரின் வாகனத்தின் அருகே, பைக்கில் சென்றுகொண்டிருந்த இளைஞர்கள் போலீஸாரை சீட் பெல்ட் போடச் சொல்லி அறிவுறுத்தியபோது, வாகனம் ஓட்டிய உதவி சப்-இன்ஸ்பெக்டர் உட்பட யாவரும் இளைஞர்கள் கூறியதை புறக்கணித்தது உட்பட அத்தனையும் அந்த இளைஞர்கள் வைத்திருந்த கோப்ரா வகை கேமராவில் பதிவானது.

இதனையடுத்து, போலீஸாரின் பொதுப்பணிக்கு இடையூறு தந்ததாக அந்த இளைஞர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றிருந்த சூழ்நிலையில், உண்மையில், இளைஞர்களின் அறிவுறுத்தியபடி சீட் பெல்ட் அணியாத காவலர்களின் பேச்சு, வீடியோவாக பரவியதை அடுத்து, காவலர்கள் மீது மேலதிகாரிகஜளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கிய கூடுதல் சப்-இன்ஸ்பெக்டர், தான் பணிபுரிந்து வந்த அரூர் காவல் நிலையத்தில் இருந்து காயம்குளம் காவல் நிலையத்துக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். முன்னதாக, ‘நாங்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் உங்களுக்கு என்ன பிரச்சனை’ என போலீஸார் கேட்டபோது, அந்த இளைஞர்கள், ‘பொதுமக்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் உங்களுக்கு என்ன பிரச்சனை’ என கேட்டதாகக் கூறப்படுகிறது.

Tags : #KERALA #POLICE #TRAFFIC #ROADRULES