போலீஸ் ஸ்டேஷன் அருகே ரியல் எஸ்டேட் அதிபருக்கு நடந்த கொடூரம்..! பட்டப்பகலில் நடந்த பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 22, 2019 11:45 AM

தூத்துக்குடியில் நீதிமன்றம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man brutally killed near Police station in Tuticorin

தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா என்கிற சிவக்குமார். இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2005 -ம் ஆண்டு பச்சைப்பெருமாள் என்பவர் கொலை வழக்கில் சிவக்குமார் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராக சிவக்குமார் வந்துள்ளார்.

நீதிமன்றத்தின் அருகே காரை நிறுத்திவிட்டு சிவக்குமார் நடந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் சிவக்குமாரை கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த சிவக்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் பரிதாபமாக சிவக்குமார் உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பச்சைப்பெருமாள் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குபழியாக சிவக்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சிவக்குமார் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு அருகில் தென்பாகம் காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இருப்பது குறிப்பிடத்தக்கது. பட்டப்பகலில் காவல் நிலையம் அருகிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #TUTICORIN #KILLED #REAL ESTATE #MAN #POLICESTATION