‘ஒவ்வோரு தடவையும் இப்டி பண்றாரு’.. ‘வாழ்நாள் முழுக்க இத ஃப்ரீயா கொடுங்க’.. மாஸ் வெற்றிக்குபின் ஸ்டோக்ஸின் வைரல் ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 26, 2019 08:42 PM

இங்கிலாந்து வீரர் ஜாக் லீச்சிற்கு வாழ்நாள் முழுவதும் கண்ணாடி இலவசமாக வழங்க வேண்டும் என பென் ஸ்டோக்ஸ் ட்வீட் செய்துள்ளார்.

Jack Leach gets free glasses for life after Ben Stokes\'s request

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்து கடைசி வரை களத்தில் நின்றார். இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு ஸ்டோக்ஸ் முக்கிய காரணமாக அமைந்தார்.

இப்போட்டியின் போது இங்கிலாந்து வீரர் ஜாக் லீச் பலமுறை தனது கண்ணாடியை எடுத்து துடைத்து துடைத்து அணிந்தார். இது அப்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்  ‘ஜாக் லீச்சிற்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக கண்ணாடி வழங்க வேண்டும்’ என ஆஷஸ் தொடரின் ஸ்பான்ஸர் ஸ்பெக் சேவர்ஸிடம் வேண்டுகோள் வைத்தார். அதற்கு  ‘நாங்கள் ஜாக் லீச்சிற்கு வாழ்நாள் முழுவதும் கண்ணாடி வழங்க உறுதி அளிக்கிறோம்’ என பதில் ட்வீட் செய்துள்ளது.

Tags : #ASHES2019 #BENSTOKES #JACKLEACH #SPECSAVERSSPECSAVERS #GLASSES #TEST