ஒரே கல்லுல 'ரெண்டு' மாங்கா... கொரோனாவ 'தடுக்குறோம்' அதே நேரம்... பிளாட்பார்ம் 'டிக்கெட்' காச 5 மடங்கு ஏத்துன ரெயில்வே !

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Mar 17, 2020 07:50 PM

கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வினை மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு பல்வேறு வழிகளில் எடுத்துரைத்து வருகின்றன. இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 3 பேர் பலியாகி இருப்பதால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும், பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடுத்தும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Railways increases platform ticket prices by five times

உச்சகட்டமாக மால்கள், பப்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் ஆகியவை இழுத்து மூடப்பட்டு உள்ளன. கல்யாணம், கான்பரன்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை தள்ளி வைக்குமாறும் மத்திய அரசு கேட்டுக்கொண்டு வருகிறது. சுகாதாரத்துறையினர் பொது இடங்களில் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து பொதுமக்களுக்கு கொரோனா பரவாமல் தடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரெயில்வே துறை மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே துறையின் கீழ்  வரும் ரெயில் நிலையங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை 5 மடங்காக உயர்த்தியுள்ளது. முன்னதாக 10 ரூபாயாக இருந்த டிக்கெட் கட்டணம் தற்போது 50 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. இதனால் தேவையில்லாமல் மக்கள் ரெயில் நிலையங்களுக்கு வருவதை தடுக்க முடியும் என ரெயில்வே துறை கருதுகிறதாம். மறுபுறம் சென்ட்ரல் உள்ளிட்ட தெற்கு ரெயில்வே நிலையங்களிலும் இந்த டிக்கெட் கட்டணம் நடைமுறைக்கு வருமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.