இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Nov 29, 2019 01:05 PM
1. தெலுங்கானாவை உலுக்கிய பெண் மருத்துவர் கொலையில், லாரி டிரைவர் உட்பட நான்கு பேர் கைது.
2. ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் கொசுவலைகள் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
3. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்குதல் நடத்தும் புதிய ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
4. 2022-ம் ஆண்டு செப்டம்பர் இறுதிக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
5. நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 5,949 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
6. உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதற்குத் தேவையான அனைத்தையும் அதிமுக செய்துவிட்டு, திமுகதான் நீதிமன்றம் சென்று தேர்தலை நடத்தவிடாமல் தடுப்பதாக கூறுவதா? என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
7. அரசின் பொது நிகழ்ச்சிகளுக்கு முறைப்படி தன்னை அழைக்காவிட்டால், அடித்து உதைப்பேன் என ஆந்திர சபாநாயகர் தம்மினேனி சீதாராம், அதிகாரிகளை மிரட்டிய சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
8. நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலையளிக்கிறது; ஆனால் பொருளாதாரத்தை விட நமது சமூகத்தின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது என, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்துள்ளார்.
9. சென்னை கோயம்பேட்டில் ரூ.486.21கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்.
10. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் சாட்சிகளை ஆடியோ, வீடியோ பதிவு செய்ய வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.